உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தே.மு.தி.க., கூட்டம்

தே.மு.தி.க., கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை நகர் தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் பன்னீர் செல்வம், துணை பொறுப்பாளர் அழகர்சாமி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் பாக்கிய செல்வராஜ் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் திருவேங்கடம் பேசுகையில், தே.மு.தி.க., ஒரு நல்ல கூட்டணியில் சேர்ந்தால் தான் மரியாதை கிடைக்கும்.அ.தி.மு.க., பழிவாங்கி விட்டது. ராஜ்யசபா சீட்டு தருவோம் என்று கூறிவிட்டு தரவில்லை.வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு பூத்கமிட்டி அமைத்துள்ளோம். ஆனால் நம்மை பழிவாங்க கூட்டணி கட்சி நினைக்கும் போது இந்த கூட்டணி சரியில்லை என்று தான் தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !