உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெடுமரத்திற்கு புதிய அங்கன்வாடி தேவை

நெடுமரத்திற்கு புதிய அங்கன்வாடி தேவை

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம்நெடுமரத்தில் சேதமடைந்த அங்கன்வாடிக் கட்டடம், மேல்நிலைத்தொட்டியை அகற்றி, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். நெடுமரம் ஆதி திராவிடர் காலனியில் உள்ள அங்கன்வாடியில் தற்போது 15 குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுக்கு முன் அங்கன்வாடி கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், தற்போது வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அங்கு மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. அதே போன்று அங்கன்வாடி மையம் அருகே சேதமான குடிநீர் மேல்நிலை தொட்டியையும் அகற்றிவிட்டு, புதிதாக அங்கன்வாடி, மேல்நிலை தொட்டி கட்டித்தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ