மாணவன் கொலையில் அலட்சியம்: இன்ஸ்., இடமாற்றம்
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ், 46, என்பவரின் மகன் ரோகித், 13. அஞ்செட்டி அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர், மாவனட்டியை சேர்ந்த மாதேவன், 21, அவரது காதலியான, 18 வயது கல்லுாரி மாணவி, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாதேவன், 21, ஆகியோரால் கொலை செய்யப்பட்டார். மாணவன் கடத்தப்பட்டதாக, ஜூலை, 2ம் தேதி இரவு, 11:00 மணிக்கு, இரவு பணியிலிருந்த தலைமை காவலர் சின்னதுரை விசாரணைக்கு அனுப்பப்பட்டார். உறவினர்களிடம் அவர், 'மாணவனை கடத்த அவன் என்ன கோடீஸ் வரனா...' என கேட்டதாக கூறப்படுகிறது. பணியில் அலட்சியமாக இருந்ததால், சின்னதுரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எஸ்.பி., தனிப்பிரிவு காவலராக இருந்த சுதாகர், மாணவன் கடத்தப்பட்ட தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால், அவர் தளி ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.