உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அலட்சியம்: காரைக்குடியில் நெடுஞ்சாலை அதிகாரிகள் அலட்சியம்...: பாதரக்குடியில் பாரம்பரிய குடிநீர் ஊரணி பாதிப்பு

அலட்சியம்: காரைக்குடியில் நெடுஞ்சாலை அதிகாரிகள் அலட்சியம்...: பாதரக்குடியில் பாரம்பரிய குடிநீர் ஊரணி பாதிப்பு

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் காரைக்குடி அருகே பாதரக்குடியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காரைக்குடி -- மதுரை ரோட்டில் இந்த ஊரை சேர்ந்த பாரம்பரிய குடும்பத்தார், வீடு கட்டுவதற்காக ஊரணியை கட்டியுள்ளனர்.இந்த ஊரணியில் மழை நீர் சேகரம் செய்து, பாதரக்குடி மக்களுக்கு குடிநீர் ஊரணியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இயற்கையாக நீரூற்று போல் குடிநீர் வந்ததால், ஊரணியை சுற்றி படித்துறைகள் கட்டி கொடுத்துள்ளனர்.பாரம்பரியமாக இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை ஊரணி பூர்த்தி செய்து வந்தது. இக்கிராம மக்களுக்கு மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் வியாபாரிகள், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் தாகத்தை தீர்த்த ஊரணியாக இருந்து வருகிறது.

ரூ.659 கோடியில் 4 வழிச்சாலை

இந்நிலையில் மேலுார் - காரைக்குடி வரையிலான 45 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் பாதரக்குடியில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. பாலம் கட்டுமான பணிக்கு பூங்குடி கண்மாயில் இருந்து மணல் அள்ளி குளத்தின் அருகே குவித்து வைத்தனர்.மழை காலத்தில் கிராவல் மண் சரிந்து மீண்டும் ஊரணிக்குள் சரிந்து வருகிறது. இதனால் பாரம்பரிய குடிநீர் ஊரணி பயனற்று போகும் நிலை ஏற்பட்டது.இதனால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், குடிநீர் ஊரணியை துார்வாரி தருவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்திருந்தனர். பாலம் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஊரணியை துார்வாரும் பணிகளை கண்டு கொள்ளவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்த பாதரக்குடி மதிவாணன் கூறியதாவது, பாலம் கட்டுமான பணிக்காக குடிநீர் ஊரணியை துார்வாரி தருவதாக அளித்த வாக்குறுதியை நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும்.இதன் மூலம் பாரம்பரிய குடிநீர் ஊரணி பாதுகாக்கப்படும், என்றார். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.பாலம் கட்டும் பணி முடிந்த பின், குடிநீர் ஊரணியை கண்டிப்பாக துார்வாரி தருவோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை