மேலும் செய்திகள்
மண் பரிசோதனை செய்ய நடமாடும் வாகன சேவை
22-Jul-2025
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை அகற்றியதால் மக்கள் குடிநீருக்கு பெரிதும் அவதிப் படுவதாக தினமலர் நாளிதழ் செய்தி, எதிரொலியாக புதிய இயந்திரம் பொருத்தினர். கலெக்டர் அலு வலகத்தில் திங்கள்தோறும் பொது குறைதீர் கூட்டம், மாதம் ஒரு நாள் விவசாயிகள் குறைதீர் கூட்டம், இது தவிர மாவட்ட அதிகாரி களுக்கான ஆலோசனை கூட்டங்கள் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்காக அன்றாடம் நுாற்றுக்கணக்கான கிராம மக்கள் இங்கு வந்து செல் கின்றனர். இவர் களின் குடிநீர் தாகத்தை தீர்க்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரைத்தளம்,முதல்தளங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்திருந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த இயந்திரங்களை பரா மரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால், இயந்திரம் பழுதாகி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும், துணை முதல்வர் வருகைக்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை அகற்றி, மீண்டும் பொருத்தாமல் விட்டுவிட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் மக்கள் குடிநீர் தாகம் தீர்த்து வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
22-Jul-2025