செய்திகள் சில வரிகளில்
பள்ளி ஆண்டு விழாதிருப்புவனம்:திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளி ஆண்டு விழா நடந்தது. உதவி தலைமையாசிரியர் வீரப்பன் வரவேற்றார். தலைமையாசிரியை கற்பகவள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் பள்ளி ஆண்டுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசளித்தார். விழாவில் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியை கிறிஸ்டிசெலினா, சிறப்பு எஸ்.ஐ.,தமிழரசி பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முப்பெரும் விழாதிருப்புத்துார்:-திருப்புத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.தலைமை ஆசிரியை தவமணி தலைமை வகித்தார். துணைத் தலைமை ஆசிரியர் ரேணுகாதேவி வரவேற்றார். பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஆரிபா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரன் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தேக்வாண்டே போட்டியில் மாநில அளவில் 2,3-ம் இடங்களை வென்ற சஞ்சய், தருண் ஆகியோருக்கு பதக்கம்,சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் ஆண்டு விழாவையொட்டி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் இளஞ்சூரியன் நன்றி கூறினார்.மக்கள் தொடர்பு முகாம்சிவகங்கை:மானாமதுரை அருகே சின்னகண்ணனுாரில் பிப்., 12 ல் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும். சின்னகண்ணனுாரில் அன்று காலை 10:00 மணிக்கு நடக்கும் முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகிக்கிறார். இம்முகாமில் அரசுத்துறை அலுவலர்கள் மூலம் மக்களிடம் மனுக்கள் பெறப்படும். இக்கிராம மக்கள் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.