உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் இல்லை: பணியிடம் காலியாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு

அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் இல்லை: பணியிடம் காலியாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு

காரைக்குடி : காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் வெளியூரில் இருந்து மருத்துவர்கள் பணிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.காரைக்குடி அரசு மாவட்ட தலைமை புதிய மருத்துவமனை சூரக்குடி சாலையில் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மாதத்திற்கு 200 முதல் 300 பிரசவம் நடக்கிறது. மகப்பேறு மருத்துவர்கள் 5 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 3 பேர் மட்டுமே பணியில் இருந்தனர்.அதிலும் ஒருவர் விடுப்பு எடுத்தால்,மற்ற இருவரும் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதால் அதிக பணிச்சுமை ஏற்படுவதாக புகார் எழுந்து எழுந்தது.இந்த நிலையில் இருந்த டாக்டரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இதனால் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் பணியிடம் காலியாக கிடக்கிறது. தற்போது, வெவ்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தினமும் ஒருவர் என மாறி மாறி பணிக்கு வந்து செல்கின்றனர். இதனால் பிரசவம் பார்ப்பதில் பல்வேறு சிக்கல் நிலவி வருவதாக மக்கள் புகார் கூறு வருகின்றனர்.மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிகள் வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. ஏழை மக்கள் அரசு மருத்துவமனையை நம்பி உள்ள நிலையில் அதிக பணம் கொடுத்து தனியார் மருத்துவமனை செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் பணியிடம் தொடர்ந்து காலியாக உள்ளது. போதுமான மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில்:மகப்பேறு மருத்துவர் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது நிரந்தர மகப்பேறு மருத்துவர் ஒருவர் பணிக்கு வந்துவிட்டார். மற்றொருவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த மருத்துவரும் பணியில் சேர்ந்து விடுவார். மூன்றாவது பணியிடம் காலியாக உள்ளது. அதுவும் விரைவில் நிரப்பப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ