இளையாத்தங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் வடக்கு இளையாத்தங்குடியில் கல்வாச நாடு சார்பில் பொங்கலை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.மஞ்சுவிரட்டில் 16 காளைகள் பங்கேற்றன. அணிக்கு 9 மாடு பிடிவீரர்கள் வீதம் 16 அணிகள் பங்கேற்றன. காளைகளை பிடிக்க முயன்றதில் 6 பேர் காயமடைந்தனர். சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும், காளைகளை பிடித்த அணியினருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.