உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வட மாநில தொழிலாளி பலி

 வட மாநில தொழிலாளி பலி

வட மாநில தொழிலாளி பலி காரைக்குடி: - புதுவயல் அரிசி ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வாசிம் 50 என்பவர் வேலை செய்து வந்தார். இவர், அரிசி சேமித்து வைக்கும் பெரிய கொள்கலனில் ஏணி வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த வாசிம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகன் சுப்பிரமணி 60, இவர் நேற்று வாகுடி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது போது மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர். தற்கொலை மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகன் பூப்பாண்டி 42, குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை