| ADDED : பிப் 24, 2024 05:45 AM
இவ்வொன்றியத்தில் விவசாயிகள் ஆண்டு முழுவதும் பல்வேறு காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர்.விளைவிக்கப்பட்ட மிளகாய் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி, கத்தரி, வெண்டை, புடலை, பாகை உள்ளிட்ட பயிர்களும் இங்கு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.ஆனால் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதல் பிரச்னையால் அறுவடை காலங்களில் அவற்றிற்கு உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.ஓரிரு நாள் மட்டுமே காய்கறி அழுகாமல் இருக்கும் என்பதால் குறைந்த விலைக்கு அன்றே விற்று தீர்க்க வேண்டிய கட்டாயம் அனைத்து விவசாயிகளுக்கும் ஏற்பட்டு விடுகிறது.இதனால் இடைத்தரகர்கள் அறுவடை காலங்களில் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் பேரம் பேசி காய்கறிகளை கொள்முதல் செய்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கின்றனர். சில விவசாயிகளுக்கு முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டு அறுவடை நேரத்தில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.வீடுகளில் பழமையான முறையில் காய்கறிகளை சேமித்து வைக்கும் பட்சத்தில் அவை காய்ந்தும், அழுகியும் போய்விடுகிறது.காய்கறி பதப்படுத்தும் நிலையம் இல்லாததால் அன்றைய அறுவடை காய்கறிகளை அன்றே விற்க வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. காய்கறி பதப்படுத்தும் நிலையம் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அமையவில்லை.என்.பழனியப்பன், விவசாயி, செட்டிகுறிச்சி: ஒன்றியம் முழுவதும் மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அறுவடை காலங்களில் தினமும் 200 லாரிகளில் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு மிளகாய் அனுப்பப்படுகிறது.ஆனால் பதப்படுத்தும் நிலையம் இல்லாததால் விலை குறையும்போது சேமித்து வைத்து விற்க விவசாயிகளுக்கு வழியில்லாமல் போகிறது. எனவே இங்கு காய்கறி பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும், என்றார்.