உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சத்துணவு ஊழியர்கள் போராட்டம் 

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் 

சிவகங்கை: குறைந்த பட்ச பென்ஷன் ரூ.7850 வழங்க கோரி, முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சிவகங்கையில் மேற்கொண்டனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி, நிதி காப்பாளர் நடராஜன் தலைமை வகித்தனர். மாநில செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வி, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பொருளாளர் பிரபா பங்கேற்றனர்.சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், சாக்கோட்டை, திருப்புத்துார், சிங்கம்புணரி ஒன்றியங்களில் இருந்தும் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர். மாவட்ட செயலாளர் லதா, ஒன்றிய செயலாளர்கள் திருசெல்வி, நேரு, மாவட்ட நிர்வாகிகள் கனகஜோதி, முத்தழகு, ராமானுஜம், மணிமுரசு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !