உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குவாரியில் மூழ்கி முதியவர் பலி

குவாரியில் மூழ்கி முதியவர் பலி

பூலாங்குறிச்சி : திருக்கோளக்குடியைச் சேர்ந்தவர் கருப்பையா 80. இவர் நேற்று முன்தினம் காலை ஆடு மேய்க்க சென்றுள்ளார். மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மட்டும் மாலையில் வீட்டிற்கு வந்துள்ளன.ஆனால் கருப்பையா வீடு திரும்பவில்லை. கருப்பையாவின் மகள் தந்தையை தேடியுள்ளார். செவ்வூர் பாறை குவாரி பள்ளத்திற்கு அருகில் கருப்பையா கொண்டு சென்ற பணம், குடை அரிவாள் இருந்ததை பார்த்தார்.குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்ற கருப்பையா உள்ளே மூழ்கியிருக்கலாம் என்று பூலாங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திருப்புத்துார் தீயணைப்புத் துறையினர் நேற்று குவாரி பள்ளத்தில் தேடியபோது பாறையிடுக்கில் இருந்த கருப்பையாவின் உடல் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை