ஆன்லைனில் முதலீடு ரூ.43.50 லட்சம் மோசடி
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.43.50 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருப்புத்துாரை சேர்ந்த 54 வயது நபர் அங்கு மருந்து கடை வைத்துள்ளார். ஜூலை 2ல் இவரது வாட்ஸ் ஆப் க்கு ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்தது. அதில் இருந்த லிங்கை கிளிக் செய்தார். அதற்கு பின் அவரது அலைபேசிக்கு பேசிய நபர்கள் கூறியதை நம்பி, அவர்கள் கூறிய 7 வங்கி கணக்குகளுக்கு 2 முறை ரூ.43.50 லட்சம் வரை அனுப்பினார். ஆனால், லாப தொகையை தராமல் ஏமாற்றியதை அறிந்தார். சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிந்துள்ளனர்.