உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காரைக்குடியில் கோயில் அருகே தனியார் மதுக்கடைக்கு எதிர்ப்பு

 காரைக்குடியில் கோயில் அருகே தனியார் மதுக்கடைக்கு எதிர்ப்பு

காரைக்குடி: தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. 500 மதுக்கடைகள் மூடியுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுக்கடை திறக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பஸ் ஸ்டாப் எதிரே புதிதாக தனியார் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் சக்தி வீரமா காளியம்மன் கோயில், மருத்துவமனை, பஸ் ஸ்டாப், சர்ச் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. சட்டத்திற்கு விரோதமாக தனியார் மது கடை அமைந்திருப்பதாக கூறி 200க்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு கட்சியினர் மதுக்கடை முன்பு முற்றுகையிட்டனர். ஏ.எஸ்.பி., ஆசிஷ் புனியா அருகில் உள்ள கோயில், குடியிருப்பு, மருத்துவமனைகளை பார்வையிட்டார். தொடர்ந்து தாசில்தார் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை