உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிக்க உத்தரவு 

போலீஸ் ஸ்டேஷன்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் கண்காணிக்க உத்தரவு 

சிவகங்கை: போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள 258 சி.சி.டி.வி., கேமராக்கள் நன்றாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்து அறிக்கை வழங்க தாசில்தார்களுக்கு, கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட அளவில் 43 போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், மனுதாரர்களை வரவேற்க வரவேற்பாளர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என நியமிக்கப்பட்டு செயல்படுகின்றனர். மனுதாரர்களிடம், ஸ்டேஷனில் அத்துமீறி நடக்க கூடாது என்ற நோக்கில், ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் தலா 6 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மாவட்ட அளவில் போலீஸ் ஸ்டேஷன்களில் மக்களை மரியாதையுடன் நடத்துகிறார்களா என்பதை கண்காணிக்கவும், தொடர்ந்து சி.சி.டி.வி., கேமராக்கள் பராமரிக்கப்பட்டு, அவற்றின் பதிவுகளை சேகரித்து வைத்துள்ளார்களா என பரிசோதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட அளவில் 43 போலீஸ் ஸ்டேஷன்களில் பொருத்தப்பட்டுள்ள 258 சி.சி.டி.வி., கேமராக்களின் செயல்பாடு நன்றாக உள்ளதா என்பது குறித்து நேரடி கள விசாரணை செய்து அறிக்கை வழங்க வேண்டும் என அந்தந்த பகுதி தாசில்தார், நகராட்சி கமிஷனர், பேரூராட்சிகள் செயல் அலுவலர்களுக்கு கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ