உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

ரோடு தரத்தை கண்காணிக்க உத்தரவு

மானாமதுரை: மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார் .நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:தேன்மொழி, தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் தொட்டி பழுதடைந்துள்ளதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். தலைவர் மாரியப்பன் கென்னடி: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 186 தொட்டிகளையும் ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நம் கோடி(எ) முனியசாமி பா.ஜ., கவுன்சிலர்: தற்போது போடப்பட்ட தார் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர் மாரியப்பன் கென்னடி: தாரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.ரோடு போடும் போது அதிகாரிகள் உடன் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை