உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெயர் பலகை இல்லாத நான்கு வழிச்சாலை

பெயர் பலகை இல்லாத நான்கு வழிச்சாலை

திருப்புவனம்: மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் அனைத்து இடங்களிலும் பெயர் பலகை பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்புவனம், லாடனேந்தல்,திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுஉள்ளன. இதுதவிர நான்கு வழிச்சாலை திருப்புவனம் புதுார், செல்லப்பனேந்தல், லாடனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாகவும் செல்கின்றன.நான்கு வழிச்சாலையில் பல கிராமப்புற சாலைகளும் குறுக்கிடுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.மைல்கற்களும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கிராமப்புற ரோடுகள் செல்லும் இடங்களில் பெயர் பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் நீண்ட துாரம் சென்று திரும்புகின்றனர். திருப்புவனம் புதுார் கணநாதன் கூறுகையில், திருப்புவனம் மின்வாரிய அலுவலகம் அருகே பைபாஸ் ரோடு பிரிகிறது. அதன்பின் நரிக்குடி விலக்கு, அல்லிநகரம் விலக்கு, பிரமனுார் விலக்கு உள்ளிட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் பெயர் பலகை பொருத்தாமல் இருப்பதால் பைபாஸ் ரோட்டை கடந்த வாகனங்கள் வழி தெரியாமல் நீண்ட துாரம் சென்று திரும்புகின்றன. இரவு நேரத்தில் பாதை குறுக்கிடுவது தெரியாமல் விபத்தும் நேரிடுகின்றன. எனவே நான்கு வழிச்சாலை குறுக்கிடும் அனைத்து இடங்களிலும் பெயர் பலகை அமைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை