பனையம்பட்டி ஊருணி பராமரிப்பு துவக்கம்
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் பனையம்பட்டியில் குடிநீர் ஊருணி பராமரிப்பிற்கான பூமிபூஜையை மத்திய அரசின் குடிநீர் சுகாதார நலத்துறை அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனமான கிராமலயா நிறுவனத்தினர் நடத்தினர்.பனையம்பட்டி ஊருணியில் பனையம்பட்டி, சம்பப்பட்டி,வாணியங்காடு கிராமத்தினரின் குடிநீர் எடுத்து பயன்படுத்துகின்றனர்.ஊருணியில் பாசி படர்ந்து, கோரைப்புற்கள் வளர்ந்து நீர் மாசடைந்து குடிப்பதற்கு தகுதியற்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் அதை கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையறிந்த திருச்சி கிராமலயா நிறுவன நிறுவனர் தாமோதரன் சமூக பொறுப்பாண்மை நிதியின் கீழ் பராமரிக்க திட்டமிட்டார். மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று பராமரிப்பிற்கான பூமி பூஜை நடந்தது. பி.டி.ஓ.க்கள் சத்யன், ராஜேந்திரகுமார் ஆகியோர் பணியை துவக்கினர்.கிராமலயா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், திருஞானசம்பந்தம், முரளிதரன், ஊராட்சி செயலர் நாச்சியப்பன் உள்ளிட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்.