பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கை மாவட்ட அரசு நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளில் 13 ஆண்டாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்தும் பணி நிரந்தரம் செய்யவில்லை. இதை கண்டித்து நேற்று பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் கருப்பச்சாமி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், மாநில பொருளாளர் வைகைபிரபா, மாநில துணை தலைவர் யுவராஜ், சுதாகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர்கள் வின்சென்ட் பவுல், பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். மயங்கிய ஆசிரியர்
நேற்று காலை 10:00 மணி முதல் தொடர்ந்து மதியம் 12:00 மணி வரை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி அரசு உயர்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மனோகரன் 45, திடீரென மயங்கி கலெக்டர் அலுவலகம் முன் ரோட்டில் விழுந்தார். அவருக்கு சக ஆசிரியர்கள் முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.