உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மைசூரு, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை  விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்  பயணிகள் சங்கம் வலியுறுத்தல் 

மைசூரு, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை  விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்  பயணிகள் சங்கம் வலியுறுத்தல் 

சிவகங்கை; சிவகங்கை வழியாக மைசூரு, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்என தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம், பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் 2 வது பிளாட்பாரத்தில் கூடுதல் லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். 2 வது பிளாட்பார்மை 420 மீட்டர் வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். 24 பெட்டிகள் நிற்கும் விதமாக பிளாட்பார்ம் நீளத்தை 540 மீட்டர் வரை நீட்டிக்க வேண்டும்.யில் பெட்டிகள் நிற்கும்இடத்தை குறிக்கும் 'டிஜிடல் கோச்' போர்டு வைக்க வேண்டும்.சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை அழைத்து செல்ல பேட்டரி கார் இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும். அகமதாபாத்-ராமேஸ்வரம், எர்ணாகுளம் -வேளாங்கண்ணி, பெரோஷ்பூர் - ராமேஸ்வரம்,அயோத்யா - ராமேஸ்வரம் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களை கண்டிப்பாக சிவகங்கை, காரைக்குடியில் இரு மார்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ், மைசூரு - காரைக்குடிசிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலை விருதுநகர் வரை நீட்டிப்பதோடு, இந்த ரயில்களை புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

T Sivanantham
ஜூன் 17, 2025 14:01

No direct trains available for Mysuru Jn - Karaikkudi Jn


veeramani
ஜூன் 17, 2025 09:55

மக்களுக்கு அவர்கள் தேவைக்கு ஏற்ப ற்றின் அவர்களது வீட்டிற்கே வரவேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. எந்த ஒரு ட்ரைனிற்கும் கொச்சி மற்றும் என்ஜின் பராமரிப்பு அவசியம் தேவை. வெறுமனே கொச்சியை பெருக்கி தண்ணீர் நிறுப்பவது மட்டும் பராமரிப்பு அல்ல. டெகி ணிகளாக பல வேலைகள் எஞ்சினுலும் கோச்சிகளிலும் செய்தாகவேண்டும். முதலில் இதற்கு கட்டமைப்பு தேவை . காரைக்குடியில் இந்த வசதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது . பல்லவன் எக்ஸ்பிரஸ் இரவு 1030 மணிக்கு வந்தவுடன் பராமரிப்பு பணிகள் துவங்கி அதிகாலை 500 மணிக்குள்ளாக முடிக்கப்பட்டு விடும். பின்னர் 540 மணிக்கு பல்லவன், சென்னைக்கு கிளம்பிவிடும். இதேகத்தைத்தான் மற்றைய ட்ரைன்களும். எனவே நன்கு இயங்கிக்கொண்டுள்ள ட்ரைன்களை நீட்டிக்க சொல்லாதீர்கள். புதிய ரயில்களை இயக்க மனு கொடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை