உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் பழுதாகி நின்ற புதிய அரசு பஸ் பயணிகள் பரிதவிப்பு

திருப்புவனத்தில் பழுதாகி நின்ற புதிய அரசு பஸ் பயணிகள் பரிதவிப்பு

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று மதியம் புதிய மஞ்சள் நிற அரசு பஸ் பழுதானதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி,ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய மஞ்சள் நிற பஸ்கள் கடந்த சில வருடங்களாக இயக்கப்பட்டு வருகின்றன. புதிய பஸ்களையும் முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுதாகி நின்று வருகின்றன.மதுரையில் இருந்து ராமேஸ்வரம், கமுதி உள்ளிட்ட தொலை துார நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் அரசு பஸ்களை நம்பியே உள்ளனர். நேற்று மதியம் 1:00 மணியவில் மதுரையில் இருந்து கமுதி சென்ற அரசு பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திருப்புவனம் நகருக்குள் வரும் போது பஸ்சின் கிரவுன் பழுதானதால் பஸ் நகரவே இல்லை. பின் சக்கரத்திற்கு சுழற்சியை கொடுக்கும் கிரவுன் கட்டானதால் பஸ் அப்படியே நடுரோட்டில் நின்று விட்டது.டிரைவர், கண்டக்டர் பழுதை சரி செய்ய முயன்றும் முடியவில்லை. மதிய நேரத்தில் பஸ் பழுதானதால் பயணிகள் பலரும் சிரமத்திற்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ