உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு

 சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் கூரை அமைக்கும் பணி நடைபெறுவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் வெயில், மழைக்கு ஒதுங்க போதிய இடம் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பாதியில் தகரக் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் பேருந்து நிறுத்தாமல் இருக்கவும், பயணிகள் செல்லாதவாறு அடைப்பு ஏற்படுத்தப்பட்டு மற்றொரு பகுதியில் மட்டுமே பஸ்கள் நின்று செல்கிறது. ஒரே நேரத்தில் இங்கு இரண்டு பஸ்கள் மட்டுமே நிற்க முடியும். இதனால் பல பஸ்கள் ரோட்டிலேயே நின்று செல்கின்றன. ஒரு சில பஸ்கள் சீரணி அரங்கத்தில் ஆட்களை இறக்கி விட்டு செல்கின்றன. அரை மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய பஸ்கள் உடனடியாக சென்று விடுவதால் அதை எதிர்பார்த்து வரும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எந்த பஸ் எங்கு வரும் எங்கு நிற்கும் என்று தெரியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். கூரை அமைக்கும் பணி முடிவடைய பல நாட்கள் ஆகும் நிலையில் அலைக்கழிப்பை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை