உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய கழிவு நீர்; துர்நாற்றத்தால் நோயாளிகள் ஓட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய கழிவு நீர்; துர்நாற்றத்தால் நோயாளிகள் ஓட்டம்

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்கு அருகே தேங்கியதால் துர்நாற்றத்தில் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக 800 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த மருத்துவமனையில் கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் தாய் வார்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேங்கி நிற்கிறது. மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதற்கு அருகாமையில் தான் மகப்பேறு பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளது.சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கழிவுநீரை கடந்து வார்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பொறுப்பின்றி குப்பைகளையும் தாங்கள் பயன்படுத்தும் துணிகளையும் கால்வாயில் வீசுகின்றனர்.இதனால் தான் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ