உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூரில் நாளை பகல் பத்து உற்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூரில் நாளை பகல் பத்து உற்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி அத்யயன உற்ஸவத்தை முன்னிட்டு பகல்பத்து உற்ஸவம் நாளை துவங்கி நடைபெறுகிறது.ராமானுஜரால் பாடல் பெற்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அத்யயன உற்ஸவம் பகல் பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும்.அந்த வகையில் பகல் பத்து உற்ஸவம் நாளை தொடங்குகிறது. நாளை மாலை 4:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருள்கிறார்.யாகசாலை பூஜைக்கு பின், மாலை 6:00 மணிக்கு பெருமாளுக்கு காப்பு கட்டி பகல்பத்து உற்ஸவத்தை துவக்கி வைக்க உள்ளனர். தொடர்ந்து பெரியாழ்வாருக்கு மரியாதை, பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளல் நடக்கும்.பகல் பத்து உற்ஸவத்தில் தினமும் காலை ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருள்வார். மாலை திருவாராதனம் நடக்கும்.ஜன., 12 பகல்பத்து நிறைவு நாளன்று திருமங்கையாழ்வாருக்கு மோட்சம் அருளி, ஆழ்வார் திருவடி தொழுதல் நடக்கும். பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஜன., 13 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை பெருமாள் சயனகோலத்திலும், மாலை ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருள்வர்.இரவில் ஏகாந்த சேவை அலங்காரம், இரவு 10:30 மணிக்கு தங்க பல்லக்கில் பரமபத வாசலை கடந்து ஆழ்வாருக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து தாயார் சன்னதியில் பெருமாளுக்கு காப்பு கட்டி ராப்பத்து உற்ஸவம் துவக்கப்படும். தினமும் பெருமாள் தாயார் சன்னதியில் எழுந்தருளி பரமபதவாசலை கடந்து ஆழ்வாருக்கு மரியாதை நடைபெறும். சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை