உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழையனுார் --- ஓடாத்துார் பாலத்தின் தடுப்புச்சுவர் மண் அரிப்பால் சேதம் 

பழையனுார் --- ஓடாத்துார் பாலத்தின் தடுப்புச்சுவர் மண் அரிப்பால் சேதம் 

சிவகங்கை: கிருதுமால் நதியின் குறுக்கே பழையனுார் - ஓடாத்துார் இடையே ரூ.3.42 கோடியில் கட்டிய பாலத்தின் தடுப்பு சுவர் மழைக்கு சேதமாகியுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.திருப்புவனம் தாலுகா, பழையனுார் - ஓடாத்துாரை இணைக்கும் விதமாக கிருதுமால் நதியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அங்கு ரூ.3.42 கோடி மதிப்பில் பாலம் கட்டினர். இந்த பாலம் கட்டி முடித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழைக்கு பாலத்தின் பாதுகாப்பிற்காக ஆற்றின் கரையில் கட்டப்பட்ட தடுப்பு சுவரில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரோட்டின் ஓரம் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மழைக்கு சேதமான பாலத்தின் அருகே உள்ள தடுப்பு சுவர் மற்றும் ரோட்டில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரி செய்து, அச்சமின்றி மக்கள் இந்த ரோட்டை பயணிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி