உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டியில் தவ மையம் துவக்கம்

பிள்ளையார்பட்டியில் தவ மையம் துவக்கம்

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கே.பி.நகரில் திருப்புத்துார் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் புதிய தவமைய தொடக்க விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். பிச்சை குருக்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நிர்வாகிகள் பேராசிரியர் அ.அரசரெத்தினம், பேராசிரியர் அ.சுப்பிரமணியன், எஸ்.சுப்பையா, அங்குசாமி,ஆசிரியர் இளங்கோவன், பேராசிரியர்கள் அழகுராஜா, தல்லை, தினகரன், ராஜேஸ்வரி, டாக்டர் செல்வராஜ் பங்கேற்றனர். பிரபா பார்த்தசாரதி வரவேற்றார். துணை பேராசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ