மேலும் செய்திகள்
ஓய்வூதியர் பேரமைப்பு நிர்வாகிகள் தேர்வு
20-Aug-2025
தேவகோட்டை: தேவகோட்டை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் கிளை தலைவர் தங்கராசன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுப்புராஜ் அறிக்கை வாசித்தார். பொருளாளர் தினகரன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் 70 வயதான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் தென்மண்டல செயலாளர் திருஞானசம்பந்தம், காரைக்குடி கிளை செயலாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் பங்கேற்றனர். இணை செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
20-Aug-2025