உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலாற்றின் கரையில் குப்பை நோய் அச்சத்தில் மக்கள் தவிப்பு

பாலாற்றின் கரையில் குப்பை நோய் அச்சத்தில் மக்கள் தவிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாலாற்றின் கரையில் குப்பைகளை கொட்டுவதால் அவ்வழியாகச் செல்லும் கிராம மக்கள் நோய் அச்சத்தில் தவிக்கின்றனர். வேங்கைப்பட்டி செல்லும் சாலையில் பாலாற்று பாலம் அருகே கரையின் இருபுறமும் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டுகின்றனர். இதனால் பல மீட்டர் தூரத்திற்கு குப்பைகள் பரவி துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் நோய் அச்சத்துடன் கடக்கின்றனர். ஓட்டல், மளிகை கடை, இறைச்சி கடைகளில் சேகரமாகும் குப்பைகளை இங்கு கொட்டுகின்றனர். அப்பகுதி மக்கள் கண்டித்தும் குப்பை கொட்டுவதை தடுக்க முடியவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன் பாலாறு, வன்னிமகுந்தான் கால்வாயில் குப்பைகள் கலந்து மழைக்காலங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால் பாசன வயல்களில் பிளாஸ்டிக், ரசாயன கழிவுகள் கலந்து விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை