மேலும் செய்திகள்
காவேரிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
06-Mar-2025
கீழச்சிவல்பட்டி: தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள திருப்புத்துார் அருகே உள்ள செண்பகம்பேட்டை டோல்கேட்டை மாற்றும் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி அப்பகுதியினர் கீழச்சிவல்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர்.திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலை 36ல் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி சிறுகூடல்பட்டி இளங்கோ என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜோதி ராமன் அமர்வு, தேசிய நெடுஞ்சாலையில்விதி மீறி அமைக்கப்பட்டுள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை மாற்ற ' தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டு பிப். 26ல் வழக்கை முடித்து வைத்தனர்.இந்நிலையில், கடந்த 20 நாட்களாகியும் செண்பகம்பேட்டை டோல்கேட்டில் கட்டண வசூல் தொடர்வது' குறித்து அப்பகுதியினர் பொதுமக்கள் டோல்கேட்டில் கேட்டனர். தங்களுக்கு அதற்கான உத்தரவு வரவில்லை என்று டோல்கேட் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பா.ஜ.ஐ.டி.பிரிவு நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட அப்பகுதியினர் கீழச்சிவல்பட்டி போலீசில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி புகார் தெரிவித்தனர். போலீசார் டோல்கேட் நடத்துனர்களிடம் விசாரிக்கையில், அங்கிருந்த நிர்வாகிகள், நீதிமன்ற அறிவிப்பு எங்களுக்கு வராததாலும், டோல்கேட்டை மாற்றுவதற்கான காலவரையறை ஏதும் இல்லாததாலும் டோல்கேட் இயங்குவதாகவும், இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுக்கும்' என்று தெரிவித்துள்ளனர்.
06-Mar-2025