உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூங்கில் ஊருணியில் சகதியில் தவிக்கும் மக்கள்

மூங்கில் ஊருணியில் சகதியில் தவிக்கும் மக்கள்

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு அமைக்காத காரணத்தினால் சிறிய மழை பெய்தாலே மக்கள் சகதியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்குளம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மூங்கில்ஊரணி அம்பேத்கர் நகர் பகுதியில் 400க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ரோட்டை தொடர்ந்து சீரமைக்காமல் விட்டதால் இப்பகுதியில் சிறிய மழை பெய்தாலே சேறும்,சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு,குடிநீர் போன்றவற்றை செய்து தரக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அரசின் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !