உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே கேட்டில் மோதிய வேன் பழுதால் தவித்த மக்கள்

ரயில்வே கேட்டில் மோதிய வேன் பழுதால் தவித்த மக்கள்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வன்னிக்கோட்டை ரயில்வே கேட்டில் நேற்று காலை சரக்கு வேன்மோதியதால் பழுது ஏற்பட்டு மாலை வரை மக்கள் நீண்ட துாரம் சுற்றி வந்தனர்.மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான அகல ரயில் பாதையில் சிலைமான், மணலூர்,திருப்புவனம், புதூர், வன்னிகோட்டை, டி. வேலாங்குளம் உள்ளிட்ட 19 இடங்களில் தானியங்கி ரயில்வே கேட் உள்ளன. நேற்று காலை வன்னிகோட்டை ரயில்வே கேட்டில் ரயில் வருவதற்காக கேட் கீப்பர் இயக்கியுள்ளார். அந்த வழியாகவந்த சரக்கு வேன் கேட்டை கடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் வேகமாக வரவே தானியங்கி கேட்டில் மோதி வேன் சிக்கியது. ரயில் சென்ற பின் கேட்டை திறக்க முடியவில்லை. மானாமதுரை ரயில்வே போலீசார் சரக்கு வேன் டிரைவரிடம் விசாரிக்கின்றனர். மோதிய வேகத்தில் கேட் பழுதானதால் மாலை வரை கேட் பணி நடந்தது.இதனால் கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றி திருப்புவனம் வந்து சென்றனர். இதே போல டி.வேளாங்குளம் ரயில்வே கேட்டை மூடிய பின் திறக்க முடிவதில்லை. மீண்டும் திறக்கும் போது காத்திருக்கும் வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டை கையால் தூக்கி விட வேண்டியுள்ளது. ரயில்வே கேட்களை உரிய முறையில் பராமரிக்கப்படாததால் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ