மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்ட் இல்லாத கல்லல் போராடும் கிராம மக்கள்
03-Sep-2024
காரைக்குடி தாலுகாவில்கல்லல் மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கி, காரைக்குடி கல்லல் மித்ராவயல் பள்ளத்துார், சாக்கோட்டை ஆகிய 5 உள்வட்டங்களும் 64 வருவாய் கிராமங்களும் உள்ளன. காரைக்குடி மாநகராட்சியின் முக்கிய பகுதியான கழனிவாசல் மற்றும் கல்லுப்பட்டி, சன்னாவனம் உட்பட 7 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வி.ஏ.ஓ., க்கள் இல்லை. பணியிட மாற்றம், விடுமுறை உட்பட பல்வேறு காரணங்களால் அந்த இடத்திற்கு வேறு வி.ஏ.ஓ.,க்கள் நியமிக்கப்படவில்லை. வி.ஏ.ஓ., பணி வருவாய்த் துறையில் முக்கியப் பணியாகும். வருவாய் ஆவணங்களை பராமரித்தல், பிறப்பு இறப்பு பதிவு, ஜாதி, வருமானச் சான்று உட்பட 30-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை விநியோகிப்பது, விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன் பெற சிட்டா அடங்கல் வழங்குதல்,இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் இழப்புகளை மதிப்பீடு செய்தல், சட்டம் ஒழுங்கு, அரசு நிலங்களை பாதுகாத்தல், அசாதாரண மரணங்கள் குறித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தல், அரசின் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், கனிம வளங்களை பாதுகாத்தல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்கின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் பணி நியமனத்தின் போதே எந்த கிராமத்தில் பணியாற்ற உள்ளனரோ, அதே கிராமத்தில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் தான் பணி அமர்த்தப்படுகின்றனர். அவ்வாறு சம்பந்தப்பட்ட கிராமத்தில் இருந்தால் மட்டுமே பணிகளை முழுமையாக தாமதமின்றி செய்ய முடியும். காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நகரின் முக்கிய பகுதியான கழனிவாசல் பகுதியிலிலேயே வி.ஏ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது. இதேபோல் சாக்கோட்டை மற்றும் கல்லல் பகுதியில் உள்ள பல கிராமங்களிலும் வி.ஏ.ஓ.,க்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பல்வேறு அரசுப் பணிகளும் கிடப்பில் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தாசில்தார் ராஜா கூறுகையில், காரைக்குடி தாலுகாவில் 4 இடங்கள் மட்டுமேகாலியாக கிடந்தது. காலியாக உள்ள இடங்களில் கூடுதல் பொறுப்பாக வி.ஏ.ஓ.,க்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
03-Sep-2024