மேலும் செய்திகள்
விபத்தில் ஊழியர் பலி
28-Oct-2024
ராமநாதபுரம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வி.வடமலைபாளையம் கருடாமுத்துார் பகுதியில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக தீர்த்தம் எடுக்க ராமேஸ்வரம் வந்தனர். கார்த்திகேயன் காரில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு சண்முகசுந்தரம், 45, நாகராஜ், 36, கார்த்திகேயன், 33, தீபக் அரவிந்த், 26, வந்தனர்.நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் தீர்த்தம் சேகரித்துக்கொண்டு காரில் புறப்பட்டனர். காரை தீபக் அரவிந்த் ஓட்டினார்.ராமநாதபுரம் அருகே களத்தாவூர் பகுதியில் மதியம் 12:30 மணிக்கு கார் வந்தபோது சாலையோர பாலத்தில் மோதியது.இதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்தில் பலியானார். தீபக் அரவிந்த், நாகராஜ் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லும் வழியில் பலியாயினர். கார்த்திகேயன் காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Oct-2024