உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஷீல்டு, லெசீஸ் கால்வாய்க்கு வந்து சேராத பெரியாறு பாசன நீர் கலெக்டர் விசாரணை 

ஷீல்டு, லெசீஸ் கால்வாய்க்கு வந்து சேராத பெரியாறு பாசன நீர் கலெக்டர் விசாரணை 

சிவகங்கை: சிவகங்கை அருகே ஷீல்டு, லெசீஸ் கால்வாயில் நிர்ணயித்த அளவு பெரியாறு அணை தண்ணீர் திறக்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். பெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலுார் பெரியாறு பிரதான கால்வாய் திட்ட அலுவலகத்தின் மூலம் மேலுார் அருகே குறிச்சிப்பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்கென நாளுக்கு 60 கன அடி வீதம் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இந்த தண்ணீர் 48 கால்வாய், கட்டாணிபட்டி 1, மற்றும் 2 கால்வாய், ஷீல்டு, லெசீஸ் ஆகிய கால்வாய் மூலம் சென்று 126 கண்மாய்களை நிரப்பி, 6000 ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன வசதி பெறும். சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரில் 48 கால்வாய், கட்டாணிபட்டி 1 மற்றும் 2 கால்வாய்க்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் ஷீல்டு, லெசீஸ் கால்வாயில் நாள் ஒன்றுக்கு 60 கன அடிக்கு, 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறப்பதால் கண்மாய்க்கு உரிய நீர் சென்று சேரவில்லை. எனவே இவ்விரு கால்வாய்க்கும் வர வேண்டிய முழு அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று காலை சிவகங்கை கலெக்டர் பொற்கொடி, மேலுார் பெரியாறு பிரதான கால்வாய் நீர்வள திட்ட கோட்ட செயற்பொறியாளர் குமரன், உதவி பொறியாளர்கள் ஹரிஹரன், மலைச்செல்வம் ஆகியோருடன் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆதிமூலம், கிருஷ்ணன், அய்யனார், மாரி, அப்துல்ரகுமான், ராமலிங்கம் கலெக்டரிடம், உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யலாம் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை