உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு

சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு

சிவகங்கை; மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை துவக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி சர்வ கட்சியினர் கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர். மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நடந்து வருகிறது. மருத்துவ கழிவுகளை எரியூட்டி, சுத்திகரிப்பு செய்ய உள்ளனர். இந்த நச்சு புகை காற்றில் பரவினால் சுவாசக்கோளாறு ஏற்படும். ஆலை கழிவு நீர் கண்மாய்களில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகள் உயிர்சேதம் ஏற்படும். 2024ம் ஆண்டு இந்த ஆலை துவங்குவதற்கான பூர்வாங்க பணியை துவக்கிய போதே, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், அனைத்து தரப்பினர், சர்வ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி வழங்க கூடாது என தெரிவித்தனர். எனவே இங்கு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி சர்வ கட்சியினர் கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் செயற்குழு வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் முனியராஜ், இந்திய கம்யூ., முன்னாள் நகர் செயலாளர் நாகராஜன், மானாமதுரை நகராட்சி கவுன்சிலர் நாமகோடி, காங்., நகர் தலைவர் புருேஷாத்தமன், பேரூராட்சி முன்னாள் தலைவர் தீனதயாளன், நாம்தமிழர் கட்சி செல்வ கண்ணன், காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்ட விவசாயிகள் சங்க தலைவர் முருகன், தி.மு.க., நிர்வாகி கிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ