உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் டிச.21ல் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்

தேவகோட்டையில் டிச.21ல் ஆக்கிரமிப்பு அகற்ற திட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. ராம்நகர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வரை ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தியாகிகள் ரோட்டில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட நடைபாதையில் கடைக்காரர்கள் பொருட்களை வைத்து ஆக்கிரமித்து இருந்ததால் அந்த வழியாக பள்ளிக்கு செல்ல முடியாமல மாணவர்கள் நடுரோட்டில் செல்லும் நிலை உருவானது.சில தினங்களுக்கு முன் புதிய டி. எஸ்.பி. கவுதம் பொறுப்பேற்றார். புதிய டி.எஸ்.பி., கவனத்திற்கு தேவகோட்டை ஆக்கிரமிப்பு பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. டி.எஸ். பி. கவுதம் போக்குவரத்து போலீசாருடன் ஆய்வு செய்தார். தியாகிகள் ரோட்டில் நடை பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். டிச. 21 ந்தேதி போலீசார், நகராட்சி அலுவலர், துணையோடு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை