மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி
22-Nov-2024
பூவந்தி; பூவந்தி அருகே கிளாதரி அரசு தோட்டக்கலைப்பண்ணையில் அரசு தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒட்டு மாஞ்செடி வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்ட அரசு பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 269 மாணவ, மாணவியர்களுக்கு இங்கு மரம் வளர்ப்பு, மகசூல் அதிகம் தரும் ஒட்டுச் செடி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழங்கப்படுகின்றன. திருப்புவனம் அரசு பள்ளியில் தொழிற்கல்வி பயிலும் 29 மாணவர்களுக்கு ஒட்டு மாஞ்செடி வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பார்வையிட்டார். தொழிற்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசிபா பேகம்,தொழிற்கல்வி ஆசிரியர் சந்திரசூரியன் பயிற்சி குறித்து விளக்கமளித்தனர்.
22-Nov-2024