உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காட்சிப்பொருளான பிளாஸ்டிக் குப்பை அரவைக்கூடம்

 காட்சிப்பொருளான பிளாஸ்டிக் குப்பை அரவைக்கூடம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஊராட்சியில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பை அரவை கூடம் பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக இருக்கிறது. சுற்றுலாத்தலமான இந்த ஊராட்சியில் தினமும் அதிகமான குப்பை தேங்குவதால் இங்கு முன்னுரிமை அடிப்படையில் பிளாஸ்டிக் குப்பை அரவை இயந்திரம் மூலம் பொடியாக்கி விற்பனை செய்வதற்காக அரவை கூடம் அமைக்கப்பட்டது. 15வது நிதிக் குழு மானிய திட்டத்தில் ரூ. 3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இக்கூடம் 2 ஆண்டுகளாக எந்த பயன்பாடும் இல்லாமல் பூட்டி கிடக்கிறது. துவக்கி வைத்த அன்று இயந்திரம் இயக்கப்பட்டதாகவும், அதற்குப் பிறகு மின்சாரப் பிரச்னை காரணமாக இயந்திரம் வேலை செய்யவில்லை, அதனால் பூட்டிக் கிடக்கிறது என்று தெரிவித்தனர். இச்சுற்று வட்டாரத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை துப்புரவு பணியாளர்கள் தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இக்கூடத்தையும், இயந்திரத்தையும் விரைந்து சீரமைத்து மறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ