உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அவலம்: இளையான்குடியில் வீணாகிப்போன காலி சாக்கு: விற்பனையாளர்கள் பணம் கட்ட நெருக்கடி

அவலம்: இளையான்குடியில் வீணாகிப்போன காலி சாக்கு: விற்பனையாளர்கள் பணம் கட்ட நெருக்கடி

இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்கோ மூலம் 12க்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாதந்தோறும் கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பாமாயில்,துவரம் பருப்பு,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இப்பொருட்கள் கோடவுனில் லாரிகளில் சாக்குகளில் பேக்கிங் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந் நிலையில் சாக்குகள் அங்கிருந்து வரும்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக ரேஷன் கடை பணியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.கடந்த 2 வருடங்களாக காலி சாக்குகளை கடையில் இருந்து எடுத்துச் செல்லாததாலும், பெரும்பாலான கடைகளில் காலி சாக்குகளை வைக்க போதுமான இடவசதி இல்லாததோடு, மழையில் நனைந்ததாலும் சாக்குகள் வீணாகியுள்ளது.இந்நிலையில் இளையான்குடி பகுதி ரேஷன் கடைகளில் உள்ள காலி சாக்குகளை சேகரிக்க ஒப்பந்தம் பெற்றவர்கள் சாக்குகளை வாங்கும் போது பெரும்பாலான ரேஷன் கடைகளில் சாக்குகள் வீணாகியுள்ளதால் ஒரு சாக்கிற்கு ரூ.19 வீதம் வழங்க வேண்டும் என பணியாளர்களிடம் கேட்டு கெடுபிடி செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை