மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்
02-Mar-2025
சிவகங்கை: சிவகங்கை அருகே கருங்குளம் கண்மாயில் கிராவல் மண் எடுப்பதாக நாலுகோட்டை வி.ஏ.ஓ., கார்த்திக், சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது, கிராவல் மண் கடத்தியதாக நாலுகோட்டை அருகே திருநாராயணபுரம் வரதராஜன் மகன் யோகராஜ் 44, என்பவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து, டிப்பர் லாரி, பொக்லைன் இயந்திரம் மற்றும் 1 யூனிட் கிராவல் மண்ணை பறிமுதல் செய்தனர். முதியவர் தற்கொலை
காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே கோளந்தி முத்துச்சாமி மகன் ஜெயசந்திரன் 50. இவர் மனைவி,குழந்தைகளை 10 ஆண்டாக பிரிந்து வசித்து வருகிறார். மனவிரக்தியில் இருந்தவர் மார்ச் 20 அன்று மாலை 4:00 மணிக்கு கோளந்தியில் உள்ள வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி விசாரிக்கிறார். டூவீலர் விபத்தில் பலி
திருப்புவனம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரம் தெரு நுார்தீன் மகன் முகமது அலி 51. இவர் போர்வெல் கான்ட்ராக்டராக உள்ளார். மார்ச் 18 அன்று டூவீலரில் திருப்புவனம் வந்தார். அன்று இரவு 7:00 மணிக்கு லாடனேந்தல் விலக்கு அருகே வந்தபோது, மாடு ஒன்று இவரது டூவீலரில் மோதியதில் விபத்து நேரிட்டது. விபத்தில் காயமுற்ற அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Mar-2025