உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடியும் நிலையில் போலீஸ் குடியிருப்பு

இடியும் நிலையில் போலீஸ் குடியிருப்பு

காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையில் போலீஸ் ஸ்டேஷன் 1945ம் ஆண்டு தொடங்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை போலீஸ் குடியிருப்பு செயல்பட்டு வந்தது. ஓட்டு கட்டடத்தில் செயல்பட்டு வந்த குடியிருப்பு தற்போது பயனற்று கிடக்கிறது. ஓட்டு கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்து இடிந்த நிலையிலும், சுற்றிலும் புதர் செடிகள் நிறைந்து காணப்படுகிறது. சாக்கோட்டையில் பணியாற்றும் போலீசார் காரைக்குடியில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு சென்று வருகின்றனர். போலீசார் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே, சாக்கோட்டையில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !