உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காட்டில் கேக் வெட்டிய ரவுடிகளை ட்ரோன் வாயிலாக பிடித்த போலீசார்

 காட்டில் கேக் வெட்டிய ரவுடிகளை ட்ரோன் வாயிலாக பிடித்த போலீசார்

சிவகங்கை: சிவகங்கை அருகே காட்டுப் பகுதியில் கேக் வெட்டி கொண்டாடிய வழிப்பறி கொள்ளையர்களை, 'ட்ரோன்' கேமரா உதவியுடன் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் டூ -- வீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகங்கை அருகே கீழக்குளம் காட்டுப் பகுதியில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரின் பிறந்த நாளை பலர், கேக் வெட்டி கொண்டாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க, டி.எஸ்.பி., அமல அட்வின் தலைமையில் 40 போலீசார் அடங்கிய தனிப்படையை எஸ்.பி., சிவபிரசாத் அமைத்தார். காட்டுப் பகுதியாக இருந்ததால், ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு போலீசார் கண்காணித்தனர். அங்கு, 15க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஓடத் துவங்கினர். இதில், சரவணன் மற்றும் பால்பாண்டி பிடிபட்டனர்; மீதமுள்ளவர்கள் தப்பி விட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு வாள், ஐந்து டூ - வீலர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்க ள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்