உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க நிபந்தனை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் 

சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க நிபந்தனை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் 

சிவகங்கை: சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை உரிய நேரம், இடத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன்கொண்டாடப்படும் நாளாகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். தமிழக அரசு கடந்த 4 ஆண்டாக தீபாவளி பண்டிகைக்கு காலை 6:00 முதல் 7:00 மணி, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நேர நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆண்டும் அதே நிபந்தனை படியே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை வெடித்து சுற்றுச்சூழல் மாசு அடையாமல் பாதுகாக்க வேண்டும். தீபாவளிக்கு குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்த வெளியில் பொதுமக்கள் ஒன்று கூடி பசுமை பட்டாசுகளை வெடிக்க முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம், வழிபாட்டு தலம், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். குடிசை பகுதியில் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும்,பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் பட்டாசு வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என சிவகங்கை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை