உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலிடெக்னிக் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத வாய்ப்பு

பாலிடெக்னிக் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத வாய்ப்பு

சிவகங்கை : பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படித்து நீண்டகாலமாக நிலுவைப் பாடங்கள் வைத்திருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத் தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.பல்வேறு குடும்ப சூழலில் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க பாலிடெக்னிக் மாணவர்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இறுதியாண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக எதிர்வரும் ஏப்.2025 மற்றும் அக் 2025 பருவத் தேர்வுகளின் போது நிலுவை பாடங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்த விபரங்களை https://dte.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ