உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பொங்கல் விழா

சிவகங்கையில் பொங்கல் விழா

சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் மனோஜ்குமார் சர்மா தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிநடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் செயலர் சேகர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் தியாகராஜன், முத்துபஞ்சவர்ணம், ஆசிரியர் தடியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் கவுரி வரவேற்றார். ஆசிரியர் பாலமுருகன் ஏற்பாட்டைசெய்தார். துணை முதல்வர் பூமிநாதன் நன்றி கூறினார். புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். புரவலர்கள் ஆனந்த், பாண்டி முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை