உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை அருகே பொங்கல் விழா

மானாமதுரை அருகே பொங்கல் விழா

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் அருகே உள்ள கெங்கையம்மன் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்குச் சென்று சர்க்கஸ்,கலை நிகழ்ச்சி, கலைக்கூத்து நடத்தி தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இக்குடியிருப்பில் உள்ள கெங்கை அம்மன் சுவாமிக்கு வருடம் தோறும் தை மாதம் முதல் தேதி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருட விழாவிற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கோயிலில் காப்பு கட்டி ஏராளமானோர் விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் பொங்கல் விழாவை முன்னிட்டு விரதம் இருந்தவர்களும், குடியிருப்பை சேர்ந்தவர்களும் மானாமதுரை வைகை ஆற்றுக்குச் சென்று அங்கு பூ கரகம் வளர்த்து,புனித நீரை எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை