மாவட்டத்தில் 4.17 லட்சம் கார்டுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம்
சிவகங்கை: மாவட்ட அளவில் 4.17 லட்சம் அரிசி கார்டுகளுக்கான பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 829 ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி கார்டுதாரர்கள், அகதிகள் முகாமை சேர்ந்தோர் என 4 லட்சத்து 17 ஆயிரத்து 664 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ஜன., 13 வரை வழங்கப்பட உள்ளது.சிவகங்கை இந்திராநகரில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் பொங்கல் தொகுப்பு வினியோகத்தை துவக்கி வைத்தார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.