உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளில் அலைபேசி எண், இ- மெயில் சேர்ப்பு கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  

தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளில் அலைபேசி எண், இ- மெயில் சேர்ப்பு கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  

சிவகங்கை: தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளில் அலைபேசி எண், இ- மெயில் முகவரி பதிவு செய்ய வேண்டும் என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை தபால் கோட்டத்தின் கீழ் உள்ள தபால் நிலையங்களில் தபால் ஆயுள் காப்பீடு பாலிசி பெற்றவர்களில், இது வரை பாலிசிகளில் அலைபேசி எண், இ - மெயில் முகவரி இணைக்காதவர்கள், கண்டிப்பாக இணைக்க வேண்டும். இதற்காக நவ., 1 முதல் டிச., 31 வரை அனைத்து தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும். பாலிசிகளில் அலைபேசி எண், இ- மெயில் முகவரி இணைப்பதன் மூலம் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளுக்கான பிரீமிய தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். பாலிசியின் மீது கடன் பெறுதல், முதிர்ச்சி தேதி, சரண்டர் செய்தல் ஆகிய பரிவர்த்தனை நடந்தால் அதன் விபரங்கள் பாலிசிதாரர்கள் இணைத்த அலைபேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். எனவே இது வரை பாலிசியில் அலை பேசி எண், இ- மெயில் முகவரி இணைக்காதவர்கள் , சிறப்பு முகாம் மூலம் அந்தந்த தபால் நிலையங்களுக்கு நேரடியாக சென்று இணைத்து பயன்பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !