மேலும் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம்
20-May-2025
மானாமதுரை : மானாமதுரையில் நேற்று நீண்ட நேரம் ஏற்பட்ட மின் தடையால் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செய்களத்தூர்,முத்தனேந்தல்,மானாமதுரை உள்ளிட்ட 3 வருவாய் பிர்காக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.நேற்று காலை 11:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மதியம் 1:00 வரை நீடித்ததால் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஊழியர்கள் அலைபேசி வெளிச்சத்தில் பணிகளை மேற்கொண்டனர். தாலுகா அலுவலகத்தில் இருந்த இ சேவை மையத்திலும் மின்தடை நீடித்ததால் மாணவர்கள் பல்வேறு வகை சான்றிதழ் பெறவும் மிகுந்த சிரமப்பட்டனர். மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
20-May-2025