மேலும் செய்திகள்
போலி பெண் மருத்துவர் மீது வழக்கு
01-Nov-2025
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே போலி டாக்டரின் சிகிச்சையால் கர்ப்பிணி இறந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குநர் டவுன் போலீசில் புகார் அளித்தார். திருப்புத்துார் அருகே மருதிப்பட்டியைச் சேர்ந்தவர் வீரபிரபு மனைவி சின்னப்பொண்ணு 23. கர்ப்பிணியான இவர் உடல் நலக்குறைவால் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் காலை இறந்தார். இதுகுறித்து சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அருள்தாஸ் விசாரித்தார். அதில் திருப்புத்துார் காந்தி நகர் நாகூர் அம்மாளிடம் கர்ப்பம் கலைப்பிற்காக மாத்திரை வாங்கி சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரிய வந்தது. அவரது வீட்டில் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். அவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்ததும், கர்ப்பம் கலைப்பிற்கான மருந்து, உபகரணங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து திருப்புத்துார் டவுன் போலீசில் இணை இயக்குநர் நேற்று புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.
01-Nov-2025